தபால் ஊழியர்கள் ஊர்வலம்


தபால் ஊழியர்கள் ஊர்வலம்
x

தபால் ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.

பெரம்பலூர்

பிரதமர் நரேந்திரமோடி விடுத்துள்ள வேண்டுகோளின்படி பெரம்பலூரில் ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி, தபால்துறை சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் தபால் ஊழியர்களின் ஊர்வலம் நேற்று நடந்தது. பெரம்பலூர் காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பெரம்பலூர் தலைமை அஞ்சலக அதிகாரி பெரியசாமி தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் அஞ்சலக ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தபால் புறநிலை ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் விஷ்ணுதேவன் மற்றும் தபால் ஊழியர்கள், தபால்காரர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் காமராஜர் சிக்னல், மதனகோபாலபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று தலைமை தபால் அலுவலகத்தை அடைந்தது. மத்திய அரசின் உத்தரவின்படி 75-வது சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி ஏற்றும் வகையில் பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுவதாக தலைமை அஞ்சலக அதிகாரி தெரிவித்தார்.


Next Story