தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து சேலத்தில் தபால்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து சேலத்தில் தபால்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
தபால் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் சேலம் கிழக்கு கோட்டத்தில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதையொட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தபால் துறை ஊழியர்கள் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் துரைபாண்டியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லோகநாதன், ராமு உள்பட தபால்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தபால் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். தபால் துறை ஊழியர்களின் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் அலுவலக சேவை பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story