நிலக்கோட்டையில் மதுபான பாரை மூடக்கோரி போஸ்டர்
நிலக்கோட்டையில் மதுபான பாரை மூடக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டியிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்
நிலக்கோட்டையில், மதுரை-கொடைரோடு சாலையில் தனியார் மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான பாரை மூடக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிலக்கோட்டை பஸ் நிலையம், பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், நிலக்கோட்டையில் செயல்படும் தனியார் மதுபான பார் அரசு விதிகளை முறையாக பின்பற்றாமல் செயல்படுகிறது.
அதன் அருகில் கிறிஸ்தவ ஆலயம் இருப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் தொந்தரவு ஏற்படுகிறது. அதேபோல் மதுபான பார் முக்கிய சாலையில் அமைந்துள்ளதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மதுபான பாரை மூட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நிலக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story