எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டி
ெபரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டத
தேனி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை வாழ்த்தி பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இந்நிலையில் சுரேஷ் என்பவர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நேற்று காலை பெரியகுளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
அதில் அம்மாவின் நல்லாசியுடன் அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக பதவியேற்கும் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story