கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் சுவரொட்டிகள்


கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் சுவரொட்டிகள்
x

கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டது.

புதுக்கோட்டை

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் அந்த உத்தரவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்த செயலை கண்டித்து தி.மு.க. தரப்பில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பழைய அரசு மருத்துவமனை அருகே, மின்சாரவாரிய அலுவலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில் மத்திய பா.ஜ.க. அரசில் வழக்குகளை சந்தித்து வரும் மந்திரிகளை பதவியில் இருந்து விலக்க சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா...? என்று கவர்னருக்கு கேள்வி எழுப்புவது போன்ற வாசகங்களும், மத்திய மந்திரிகள் சிலரது புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளால் புதுக்கோட்டை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story