தபால்காரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்காரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை:
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது போராட்டத்தை தொடங்கினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாக்மித்ரா மற்றும் பொதுசேவை மையங்கள் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். சீருடை படியை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தபால்காரர்கள் கோரிக்கை விளக்க அட்டையுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். வருகிற 23-ந்தேதி வரையிலும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தபால்காரர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story