பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு: விழுப்புரம், கச்சிகுடா ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும்


பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு: விழுப்புரம், கச்சிகுடா ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:32 AM IST (Updated: 4 Dec 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் , விழுப்புரம், கச்சிகுடா ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும்

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை-திண்டுக்கல் இடையேயான ரெயில் பாதையில் உள்ள தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிக்காக ஒரு சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை - விழுப்புரம் ரெயில் (வ.எண்.16868) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல புறப்படும். அதே போல, மதுரை - செகந்திராபாத் (கச்சிகுடா) வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07192) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 7-ந் தேதி அதிகாலை 6.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில் வழக்கம் போல, அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும்.


Next Story