திருக்கோவிலூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு


திருக்கோவிலூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தையில் உடன்பாடு திருக்கோவிலூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கோமலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த கட்சி அறிவித்து இருந்தது.

இதை அடுத்து மாவட்ட தலைவர் சதீஷ்குமார், செயலாளர்கள் பூவை ஆறு, கோவிந்தன், ஏழுமலை, தொகுதி செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட போராட்ட குழுவினர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைப்பதாக புரட்சி பாரதம் கட்சியினர் தெரிவித்தனர்.


Next Story