மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகத்தில் பஸ் நிறுத்தம் அருகே மண்பானை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் திருமலை, பொருளாளர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் ஏழுமலை வரவேற்றார். வருகிற பொங்கல் பண்டிகைக்கு புதிய மண் பானை, அடுப்பு ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மண்பாண்ட தொழில் பயிற்சி வகுப்பு புதிதாக உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பானை, அடுப்பு மற்றும் கரும்புகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், வடிவேலு, பழனிவேல், முருகன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story