கலை இலக்கிய திறனாய்வு போட்டி


கலை இலக்கிய திறனாய்வு போட்டி
x
திருப்பூர்

கலை இலக்கிய திறனாய்வு போட்டி

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் 19-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 பள்ளிகளில் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டியும் நடைபெற்றன. நேற்று ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய போட்டிகள் காலை 10 முதல் 11 மணி வரையிலும், கட்டுரைப் போட்டிகள் 11 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றன. போட்டிக்கு தேவையான தாள்கள், ஓவியம் வரைவதற்கான காகிதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.


Next Story