மண்எண்ணெய் ஊற்றி பெண் உயிரோடு எரிப்பு
செய்யாறு அருகே நிலத்தில் மாடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு அருகே நிலத்தில் மாடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மாடு மேய்ந்ததில் தகராறு
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் தாலுகா வாசனைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி அஞ்சலி (வயது 35). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உமையாள்புரம் கிராமத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த காமாட்சி (55) என்பவர் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைப்பதாக கூறப்படுகிறது. இதை அஞ்சலி கண்டித்து வந்துள்ளார். இருப்பினும், காமாட்சி வழக்கம் போல் கடந்த 10-ந்தேதி விவசாய நிலத்தில் மாடுகளை கட்டி வைத்துள்ளார்.
உயிரோடு எரிப்பு
இதை பார்த்த அஞ்சலி மாடுகளை அவிழ்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்சலியிடம், காமாட்சி தகராறு செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் அடைந்த காமாட்சி, அன்று இரவு மண்எண்ணெய் கேனுடன் சென்று அஞ்சலி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.
இதில் தீ உடல் முழுவதும் தீ பரவி அஞ்சலி அலறி துடித்துள்ளார். தீக்காயங்களுடன் இருந்தவரை அவரது கணவர் கன்னியப்பன் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமாட்சியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.