திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வரும் 9-ந் தேதி அதிகாலை தொடங்குகிறது


திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வரும் 9-ந் தேதி அதிகாலை தொடங்குகிறது
x

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வரும் 9-ந் தேதி அதிகாலை தொடங்குகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அதன்படி புரட்டாசி மாத மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி 10-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.


Next Story