மின்சாரம் தாக்கி முதியவர் பலி
மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தவசி என்பவரின் மகன் ஆதித்தன் (வயது 51). டிராக்டரில் தண்ணீர் சப்ளை செய்து வந்தார். அவரின் தெருவில் அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக முளைப்பாரி வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை ஆதித்தன் முளைப்பாரிகளுக்கு தேவையான தண்ணீரை மோட்டார் மூலம் ஏற்ற முயன்றுள்ளார். அப்போது மின்மோட்டாரில் மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி ஆதித்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story