பழையபேட்டையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு


பழையபேட்டையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
x

பழையபேட்டை துணை மின்நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகப்படியாக பொழிய வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக முதல்-அமைச்சர், மின்சார துறை அமைச்சர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ள மின்நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நெல்லை பழையபேட்டை துணை மின்நிலையத்தில் நேற்று நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி ஆய்வு மேற்கொண்டார். மழைப்பொழிவு மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் பணிபுரியவும், மின் பகிர்ந்து அளித்தல் மற்றும் மின் தடைகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை பற்றியும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பேரிடர் காலத்தில் தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து, மின் தடங்கல் ஏற்பட காரணமாக இருக்கும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த ஆய்வில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி, பழையபேட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர், நெல்லை டவுன் உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் மற்றும் உதவி மின்பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story