மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க ஆலோசனை கூட்டம்


மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க ஆலோசனை கூட்டம்
x

விழுப்புரத்தில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜிலு வரவேற்றார். செயலாளர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் மணிவண்ணன் வரவு, செலவு அறிக்கை சமர்பித்தார். இதில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் ஜெகன்நாதன், இணை செயலாளர் கோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அமைப்பு செயலாளர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் ஏகாம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், திருவேங்கடம் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சங்க வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் செயற்குழு உறுப்பினர் ரகோத்தமன் நன்றி கூறினார்.


Next Story