டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியைபிடித்து வாலிபர் தற்கொலை


டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியைபிடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கணவன்-மனைவி தகராறு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் தாமஸ்துரை (வயது 25). இவர் ஒரு கோழிப்பண்ணையில் தொழிலாளியான வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வரண்டியேல் பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தாமஸ்துரை தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மதுகுடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மின்சாரம் பாய்ந்தது

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் தாமஸ்துரை மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை முருகேஸ்வரி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த தாமஸ்துரை நள்ளிரவில் வீட்டில் இருந்து ெவளியேறினார்.

பின்னர் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் அவர் ஏறினார். அப்போது, அங்கிருந்த மின்கம்பியை பிடித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டார்.

பரிதாப சாவு

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று, தாமஸ்துரையை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தாமஸ்துரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

------------


Next Story