மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம்


மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம்
x

மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாமை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்பத்தூர் கோட்ட செயற்பொறியாளர் ஜி.அருள்பாண்டியன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் (வடக்கு) வி.பிரபு வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் எம்.கண்ணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் தொகுதி ஏ. நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த பயனாளிகளுக்கு பெயர் மாற்றம் செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஒன்றியக் குழு தலைவர் விஜயா அருணாச்சலம், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன் உள்பட பலர் பேசினார்கள். உதவி பொறியாளர்கள், மின் வாரிய பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் சுதாகர் நன்றி கூறினார்.


Next Story