பழனி, செம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பழனி, செம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பழனி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பழனி நகர் பகுதிகள், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பழைய ஆயக்குடி, சின்னகலையம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
இதேபோல் செம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, முண்டாம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் அணை, பாறைபட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம்காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையன்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செம்பட்டி உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.