செம்பட்டி, கன்னிவாடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
செம்பட்டி, கன்னிவாடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திண்டுக்கல்
செம்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி சீவல்சரகு, ஆதிலட்சுமிபுரம், ஆத்துப்பட்டிபிரிவு, வக்கம்பட்டி, ஆரியநல்லூர், பொம்மனம்பட்டி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கன்னிவாடி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடப்பதால் கன்னிவாடி, கீழ திப்பம்பட்டி, மணியக்காரன்பட்டி, குரும்பபட்டி, தர்மத்துப்பட்டி, குயவநாயக்கன்பட்டி, பழைய கன்னிவாடி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story