திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் அண்ணாநகர் பீடர் உயர்அழுத்த மின்பாதையில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி ஆர்.எம்.காலனி, எம்.வி.எம்.நகர், விவேகானந்தாநகர், அண்ணாநகர், ஜி.டி.என். சாலை பகுதி, சிலுவத்தூர் சாலை பகுதி, குமரன்திருநகர், தெய்வசிகாமணிபுரம், ரவுண்டுரோடு ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பழனி அருகே தாளையூத்து துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் பெரியமொட்டனூத்து, சின்னமொட்டனூத்து, கோரிக்கடவு, கோவில்அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

ரெட்டியார்சத்திரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி எஸ்.ஆர்.புரம், ஜி.பி.கே.புதூர், குள்ளம்பட்டி, போலியமனூர், குமாரபாளையம், அரசமரத்துப்பட்டி, நீலமலைக்கோட்டை, தென்றல் நகர், திருமலைராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று ரெட்டியார்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.



Related Tags :
Next Story