திண்டுக்கல் மாவட்டத்தில் 15-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்


திண்டுக்கல் மாவட்டத்தில் 15-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 15-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 15-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 15-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அசோக்நகர், பிள்ளையார் பாளையம், பாண்டியன்நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, பஸ் நிலைய பகுதி, போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சர் காம்பவுண்டு, ஆரோக்கிய மாதா தெரு, மென்டோன்சா காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திக் தெரிவித்தார்.

இதேபோல் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 15-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், ராஜாபுதூர், பொட்டிநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலம்ராஜக்காபட்டி, கதிரையின்குளம், எல்லப்பட்டி, ஸ்ரீராமபுரம், முத்தனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, பங்காருபுரம், பழக்கனூத்து, நீலமலைக்கோட்டை, மில் பீடர் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ரெட்டியார்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

காந்திகிராமம் கீழக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சம்பட்டியில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி 15-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.ஜி.ஆர். நகர், நரசிங்கபுரம், தேவழகர்பட்டி, கன்னிமார்நகர், மாதாமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பழனி, எரியோடு

வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 15-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எரியோடு, நாகையன்கோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, பாகாநத்தம், குண்டாம்பட்டி, கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமணம்பட்டி, அருப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை எரியோடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் தெரிவத்துள்ளார்.

பழனி துணை மின்நிலையம் ஆயக்குடி பீடர் மற்றும் தாளையூத்து துணை மின்நிலையத்தில் 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பழைய ஆயக்குடி, புதுஆயக்குடி, ஒபுளாபுரம், நந்தவனப்பட்டி, ஹவுசிங்போர்டு, அய்யம்புள்ளி, வரதமாநதி, பாலாறு, பொருந்தல், புளியம்பட்டி, தாளையூத்து, மொட்டனூத்து, வயலூர், சாமிநாதபுரம், புஷ்பத்தூர், கண்டியக்கவுண்டன்புதூர், லட்சலப்பட்டி பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story