21-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
தென்காசி மாவட்டத்தில் 21-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், மங்கம்மாள்சாலை, அச்சன்புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு, வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு, தென்காசி புதிய பஸ் நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.