மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்


ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை வடகாடு, ஏற காடு, குடியிருப்பு, இறால் பண்ணை பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். வருகிற 30-ந் தேதி அவசரகால பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ராமேசுவரம் டவுன், திட்டக்குடி, சம்பை, மாங்காடு, ெகந்தமாதன பர்வதம், ராம தீர்த்தம், காட்டுப் பிள்ளையார் கோவில், டி.வி. ஸ்டேஷன் உள்பட ராமேசுவரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப் படுகிறது.இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறி யாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.

தொண்டி துணை மின் நிலையத்தில் உள்ள எஸ்.பி.பட்டினம் பீடரில் வருகிற 30-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காடாங்குடி, கீழ் குடி, முகிழ்தகம், தளிர்மருங்கூர், குருமிலாங்குடி, தினையத்தூர், விளத்தூர், குளத்தூர், அரும்பூர், ஆதியூர், பேரையூர், பகவதிமங்கலம், எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், கொடிப்பங்கு, நாரேந்தல், மச்சூர், வட்டானம், பாசிப்பட்டினம், தீர்த்தாண்டதானம், எஸ்.பி.பட்டினம் மற்றும் புல்லக்கடம்பன் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல், மதியம் 2 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் நிசக்ராஜா தெரிவித்து உள்ளார்.


Next Story