நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
மின்சாரம் நிறுத்தம்
குமாரபாளையம் தாலுகா வெப்படை துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெப்படை, சாதனை, இந்திராநகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், இலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்குப்பாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்ன கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம், இளையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
உப்புபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில் நவக்காடு, உப்புபாளையம், ஆத்திக்காட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ரெயில்வே கேட் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
குமாரபாளையம், பல்லக்காபாளையம்
இதேபோல் குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு, வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் மற்றும் வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் கோபால், வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.