நெல்லை மாவட்டத்தில் 20-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்


நெல்லை மாவட்டத்தில்   20-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
x

நெல்லை மாவட்டத்தில் 20-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 20-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணிகள்

நெல்லை மாவட்டம் ரஸ்தா, பரப்பாடி, வள்ளியூர், சங்கனான்குளம், கூடங்குளம், நவ்வலடி, மேலக்கல்லூர், மேலப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 20-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், காவலர் குடியிருப்பு, பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், பட்டர்புரம், மாவடி, முத்துலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம் தங்கயம் ஆகிய பகுதிகளில் காலை 1 மணி முதல் மாலை 5 மணி வரையும்,

வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

விஜயநாராயணம்

மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ் மண்டபம், நவ்வலடி, ஆத்தங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மேலக்கல்லூர், சேரன்மாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுகல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாங்குளம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மேலப்பாளையம்

மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கப்புரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈசுவரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம் தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கத்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி,

மகாராஜநகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்பு நகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின் வினியோக செயற்பொறியாளர்கள் ஜான்பிரிட்டோ (நெல்லை கிராமப்புறம்), வளன்அரசு (வள்ளியூர்), சுடலையாடும் பெருமாள் (கல்லிடைக்குறிச்சி), முத்துக்குட்டி (நெல்லை நகர்புறம்) ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.


Next Story