மணலூர்பேட்டை, சங்கராபுரம், ஆலத்தூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


மணலூர்பேட்டை, சங்கராபுரம், ஆலத்தூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணலூர்பேட்டை, சங்கராபுரம், ஆலத்தூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

மணலூர்பேட்டை தேவரடியார்குப்பம் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான மணலூர்பேட்டை, சித்தப்பட்டிணம், செல்லங்குப்பம், சாங்கியம், அத்தியந்தல், கர்ணாசெட்டிதாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூர், முருக்கம்பாடி, கொங்கணாமூர், கழுமரம், சொறையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனூர் அருதங்குடி, மெலாரிபட்டு ஆகிய கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதேபோன்று சங்கராபுரம், ஆலத்தூர் ஆகிய துணைமின் நிலையத்தில் நாளை நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக, சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி. பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி மற்றும் ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம்,

மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமனத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிபட்டு, சோழம்பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், சூ.பாலப்பட்டு, தண்டலை, பெருவங்கூர், ரோடுமாமாந்தூர், சிறுவங்கூர், மேலப்பட்டு, கீழப்பட்டு, தொன்னந்தூர், எம்.ஜி.ஆர்.நகர், சிங்காரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்கும் மின்சாரம் வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


Next Story