மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓரி வயல் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓரி வயல், சவேரியார் பட்டினம், மீனங்குடி, மேலச்சிறு போது, கீழச் சிறு போது, அரப்போது, குமாரகுறிச்சி, கருமல், காமாட்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

அதேபோல் கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சாயல்குடி மின்பாதையில் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகு சந்தை, பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம். கோட்டை, துத்தி நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Next Story