மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எஸ்.புதூர்,
திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுக்குடிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, கூத்தலூர், ஆலங்குடி, இளங்குடி, தட்டட்டி, கொரட்டி, துளாவூர், பாதரக்குடி, குன்றக்குடி, சின்ன குன்றக்குடி, நேமம், கூத்தகுடி நேமம், கம்பனூர், நடுவிக்கோட்டை, கண்டரமாணிக்கம், பொன்னான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.