கடத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மொரப்பூர்:
கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி, ராமியணஅள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்மட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புது ரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஓடசல்பட்டி, ஓபிளிநாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு மற்றும் இதை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் தீர்த்தமலை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டிபுதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை செயற்பொறியாளர்கள் ரவி, பூங்கொடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.