பரவை பகுதிகளில் இன்று மின்தடை
பரவை பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது
வாடிப்பட்டி,
சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் பீடர், கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. எனவே சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள அலங்காநல்லூர் பீடருக்குட்பட்ட பரவை, பரவை காலனி, கோயில் பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழ நெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகபட்டி ஆகிய பகுதிகள். கொண்டையம்பட்டி துணை நிலையத்திற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி, கள்வேலிபட்டி, மாரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், கொண்டயம்பட்டி, அய்யன கவுண்டம்பட்டி, செம்புக்குடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகபட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிபட்டி ஆகிய பகுதிகளிலும், அயயங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அய்யங்கோட்டை, சி புதூர், சித்தாலங்குடி, மூலக்குறிச்சி, வைரவ நத்தம், ஆனைகுளம், ஆர்.கே.ராக், கோத்தாரி, கே.எம்.ஆர் நகரி, எஸ்.என்.பி ஏரியா, தனிச்சியம் அக்ரி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.