திருவெறும்பூர், கே.சாத்தனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


திருவெறும்பூர், கே.சாத்தனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

திருவெறும்பூர், கே.சாத்தனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத் நகர் 100 அடி ரோடு, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி பழங்கனாங்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கே.கே.நகர், ஆர்.வி.எஸ்., எல்.ஐ.சி. காலனி, குடித்தெரு, காமராஜ் நகர், ஜே.கே.நகர், பழனி நகர், வயர்லெஸ் ரோடு, ஆனந்த் நகர், எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, சுந்தர்நகர், அய்யப்பா நகர், காஜாமலை காலனி, முல்லை நகர், இந்தியன் பேங்க் காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், செம்பட்டு ஒரு பகுதி, இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, சந்தோஷ் நகர், ஓலையூர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


Next Story