நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

கடத்தூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகின்றன.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடத்தூர் மின்வாரிய கோட்டம் வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர், பொம்மிடி ஆகிய துணை மின் நிலையங்களில் பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசி கவுண்டனூர், பி.துறிஞ்சிபட்டி, நடூர், பில்பருத்தி, கேத்துரெட்டிபட்டி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, கே.மோரூர், கன்னபாடி, கே.எஸ்.புதூர், வத்தல்மலை, கொண்டகார ஹள்ளி, ரேகட ஹள்ளி, திப்பி ரெட்டி ஹள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுதவிர வே.முத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் 11 கிலோ வாட் மின்பாதையில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய பண்டார செட்டிப்பட்டி மின்பாதை அமைக்கும் பணி நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story