மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Jun 2022 12:07 AM IST (Updated: 29 Jun 2022 11:34 AM IST)
t-max-icont-min-icon

பட்டிணம்காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள பாரதிநகர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் பட்டிணம்காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள பாரதிநகர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பாரதிநகர், நேருநகர், மகாசக்திநகர், புளிக்காரத்தெரு, குமரையாகோயில், ஆசி மருத்துவமனை, ஜி.எஸ்.எம். மால் மற்றும் ஓ.வி.எஸ்.மகால் பகுதிகளில் இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் பெருநாழி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை பெருநாழி, டி.எம்.கோட்டை, கே.என்.பட்டி, குருவாடி பம்மனேந்தல், பொந்தம் புளி, வி.எம்.பட்டி, காடமங்கலம் கிராமங்களுக்கு மின்வினியோகம் இருக்காது என்று கமுதி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story