இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

தர்மபுரி, அரூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி

அரூர்:

தர்மபுரி, அரூர் மின்வாரிய செயற்பொறியாளர்கள் பூங்கொடி, இந்திரா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரூர் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், அச்சல்வாடி, பே.தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கீரைப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எட்டுப்பட்டி, விளாம்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதேபோன்று தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று சிறப்பு பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக ஆத்துமேடு, எல்லம்மாள் கொட்டாய், அல்லையன் கொட்டாய், கான் காலனி, குப்பாண்டி தெரு, வேடியப்பன் திட்டு, சாய்பாபா கோயில், கந்துகாரன் தெரு, அன்னசாகரம், கலெக்டர் பங்களா, தோக்கம்பட்டி, சத்யா நகர், சேஷம்பட்டி, பாகல்பட்டி, நல்லம்பள்ளி, கெங்கலாபுரம், மோட்டூர், அல்லியூர், புலிக்கரை, காமலாபுரம், மேக்னாம்பட்டி, சித்தன் கொட்டாய், மூக்கனூர், செம்மனஅள்ளி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதேபோல் இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story