இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை

பராமரிப்பு பணி காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

மதுரை அரசரடி மற்றம் திருப்பாலை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அரசரடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட சம்மட்டிபுரம் மெயின்ரோடு, ஸ்ரீராம்நகர், எம்.எம்.நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக்நகர் 7 முதல் 15-வது தெரு வரை, கோஆப்டெக்ஸ் காலனி, ஜெய்நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி தேவர்காலனி, கிருதுமால் நகர், ஜானகிநகர், ஆனந்தாநகர், தேவகி ஸ்கேன், வெள்ளைகண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனி புதூர், அமிர்தாநகர், தேனி மேயின்ேராடு ஈத்காபில்டிங் வரை, பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் ெசய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.

திருப்பாலை, மாணிக்கம்பட்டி

திருப்பாலை துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஆபிசர்ஸ் டவுன், சி.ஆர்.ஓ.காலனி, ஐ.டி. குவார்ட்ஸ், சென்ட்ரல் எக்சைஸ் காலனி, மீனாம்பாள்புரம் மெயின்ரோடு, எஸ்.வி.பி.நகர், வைகைநகர், பாலமுருகன்நகர், முடக்காத்தான், எஸ்.ஆலங்குளம், குலமங்கலம் மெயின்ரோடு, அலமேலுநகர், பிரசன்னாநகர், அன்புநகர், மங்கல விநாயகர்நகர், ஆனந்தாநகர், ராயல்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்தார்.

சமயநல்லூர் மின்கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வலையபட்டி பீடர் மற்றும் ஏர்ரம்பட்டி பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறவபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிகல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி, தேவசேரி பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

அழகர்கோவில்

மதுரை அழகர்கோவில் துணை மின்நிலையத்தில் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாயக்கன்பட்டி, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அழகாபுரி, அழகர்கோவில், அ.வலையப்பட்டி, மூணூர், கோட்டவாசல், அப்பன்திருப்பதி, மாத்தூர், செட்டிக்குளம், பூண்டி ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Next Story