ராமநத்தம், வேப்பூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
ராமநத்தம், வேப்பூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
ராமநத்தம்,
திட்டக்குடி மின்கோட்டத்துக்குட்பட்ட தொழுதூர் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தொழுதூர், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், தக்கார், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலக்கல்பூண்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் வேப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வன்னாத்தூர், சாத்தியம், கண்டப்பன்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுகூர், பெரம்பலூர், கோமங்கலம், மழவராயநல்லூர், மணலூர், தொரவலூர், பரவலூர், கச்சி பெருமாநத்தம், எருமனூர், முகுந்த நல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை திட்டக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.