பெரம்பலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் ரத்து


பெரம்பலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் ரத்து
x
தினத்தந்தி 10 Jan 2023 12:58 AM IST (Updated: 10 Jan 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுதாகவும், இதையொட்டி அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்றும் ஏற்கனவே பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதியும், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை முன்னிட்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மின்சாரம் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது என்றும், இந்த மின் நிறுத்தம் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story