மின்கம்பம் சாய்ந்ததால் 4 மணி நேரம் மின்தடை
மயிலத்தில் மின்கம்பம் சாய்ந்ததால் 4 மணி நேரம் மின்தடை பொதுமக்கள் கடும் அவதி
விழுப்புரம்
மயிலம்
மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் கீழ் மயிலம் மணல் ஏரி அருகே உள்ள மின்கம்பத்தின் பக்கவாட்டு ஸ்டே கம்பியை யாரோ மர்ம நபர்கள் பிடுங்கி விட்டுள்ளனர். இதனால் பிடிமானத்தை இழந்த மின்கம்பம் அருகில் நின்ற மரத்தின் மீது சாய்ந்தது. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசியதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதற்கிடையே மின்கம்பம் ஒடிந்து விழுந்த இடத்தை மின்வாரிய ஊழியர்கள் கண்டுபிடித்து தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொண்டு மின்சாரம் வினியோகம் செய்தனர். இதனால் மயிலம் பகுதியில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதில் வணிகர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள், முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story