அழகாபுரி பகுதியில் இன்று மின்தடை
அழகாபுரி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
ராஜபாளையம்
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. ஆதலால் 11-வது தமிழ்நாடு சிறப்பு போலீஸ் குடியிருப்பில் புது டவுன், திருக்கோதையாபுரம், அழகாபுரி, திருவேங்கடபுரம், அட்டை மில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. அதேபோல ராமன் பட்டி ஊரக உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக மின் வினியோகம் இன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 வரைஇருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story