ஆண்டாங்கோவில், புலியூரில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்


ஆண்டாங்கோவில், புலியூரில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x

ஆண்டாங்கோவில், புலியூரில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் மற்றும் புலியூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட காமராஜபுரம், கே.வி.பி. நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச் சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளிலும், புலியூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேல மாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய வட்ட செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story