அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை


அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை
x

சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி, ஆலமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிவகாசி மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.


Next Story