அரும்பாவூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
அரும்பாவூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பெரியம்மாபாளையம், கள்ளப்பட்டி, பூஞ்சோலை, அய்யர்பாளையம், வெட்டுவால்மேடு, சாஸ்திரிபுரம், பெரியசாமி கோவில், அரசடிக்காடு, மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், பூலாம்பாடி, கடம்பூர், இந்திராநகர், விஜயபுரம், சின்னமுட்லு, புதூர், தொண்டமாந்துறை ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.