பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்துசெய்யப்படும்.
தாம்பரம்: ராதாநகர் பாரதிபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பாரத்மாதா தெரு, அண்ணாமலை தெரு, ரவி தெரு, காமராஜர் தெரு டி.என்.எஸ்.சி.பி. வரதபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், செட்டிநாடு வில்லா மாடம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பன் நகர், வேம்புலியம்மன் கோவில் தெரு.
போரூர்: ருக்மணி நகர், முத்தமிழ் நகர், எஸ்.பி.அவென்யூ, நண்பர்கள் நகர், சுமித்ரா நகர், வைத்தி நகர், ராயல் சிட்டி.
ஐ.டி.காரிடர்: பெருங்குடி திருமலை நகர் 1-வது , 2-வது மற்றும் 3-வது தெரு.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின்வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.