கடலூர் முதுநகர், வடலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


கடலூர் முதுநகர், வடலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

கடலூர் முதுநகர், வடலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

கடலூா் முதுநகர்

கடலூர் செம்மங்குப்பம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடலூர் துறைமுகம், கடலூர் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானூர், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, செல்லங்குப்பம், ஏணிக்காரன்தோட்டம், பூண்டியாங்குப்பம், சித்திரைப்பேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர் ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், கிஞ்சம்பேட்டை, சிவானந்தபுரம், நடுத்திட்டு, தியாகவள்ளி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சாலைக்கரை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, சிந்தாமணிக்குப்பம், காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வடலூர்

வடக்குத்து துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வடலூர், வடக்குத்து, அரசு பண்ணைக் கழகம், கீழூர், இந்திரா நகர், ஆபத்தாணபுரம், எல்லப்பன் பேட்டை, மேட்டுக்குப்பம், கங்கைகொண்டான், வடக்கு மேலூர், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணகி தெரிவித்தார்.


Next Story