தாந்தோணிமலை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
தாந்தோணிமலை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர்
தாந்தோணிமலை துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தாந்தோணிமலை துணை மின் நிலையத்தை சேர்ந்த காளியப்பனூர் கிழக்கு, பாரதிதாசன் நகர், சத்தியமூர்த்தி நகர், ராமச்சந்திரபுரம், சுங்க கேட், குமரன் சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் புலியூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்கு பாளையம், ஆர்.என்பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேல மாயனூர், சின்னம நாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story