துவாக்குடி பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
துவாக்குடி பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நேருநகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்., அக்பர்சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ, இ, ஆர், பிஎச் செக்டார், தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story