எல்லீஸ் நகரில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ் நகரில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. பரவை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி காரணமாக எல்லீஸ் நகரில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. பரவை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
எல்லீஸ்நகர்
மதுரை எல்லீஸ்நகர் துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் எல்லீஸ்நகர் மெயின்ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு, போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு மற்றும் மருத்துவமனை ரோடு.
மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7-வது தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், எஸ்.டி.சி. ேராடு முழுவதும், பைபாஸ்ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம், வசந்தநகர், ஆண்டாள்புரம், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமராட் வீதி, மேலபெருமாள் வீதி, டவுன்ஹால் ரோடு, காக்காதோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனை மதுரை தெற்கு மின்செயற்பொறியாளர் மோகன் ெதரிவித்துள்ளார்.
பரவை
சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் பீடர், விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் கொடிக்குளம் பீடர், சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பெப்சி பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்ததுகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி, காடுபட்டி, கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதி மாணிக்கம், பரவை ஏ.ஐ.பி.இ.ஏ.காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், வித்யா வாகினி அபார்ட்மெண்ட், மங்கையர்கரசி கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.