கோடங்கிபட்டி, பொரணி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


கோடங்கிபட்டி, பொரணி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

கோடங்கிபட்டி, பொரணி பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் உள்ள சாரதா கல்லூரி பீடர், கரூர் துணைமின் நிலையத்தில் உள்ள கே.வி.பி. நகர் பீடர், உப்பிடமங்கலம் துணைமின் நிலையத்தில் உள்ள பொரணி பீடர், ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் உள்ள மின்னம்பள்ளி பீடரில் மேம்பாட்டு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோடங்கிபட்டி, பத்தாம்பட்டி, கந்தசாரப்பட்டி, வெடிக்காரன்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, பெரியார் நகர், வையாபுரி நகர் 2-வது கிராஸ், கணேசன் நகர், காந்திபுரம், எம்.ஜி.ரோடு, கே.வி.பி.நகர், பொரணி, அல்லியாகவுண்டனூர், ஒத்தக்கடை வடக்கு, செல்லிபாளையம், கோயம்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story