மன்னார்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


மன்னார்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 July 2023 1:09 AM IST (Updated: 12 July 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்புரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- திருச்சி மன்னார்புரம் துணைமின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.ஹெச்.காலனி, உஸ்மான்அலிதெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ்நகர், ஹைவேஸ்காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story