பழங்காநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பழங்காநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பழங்காநத்தம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

மதுரை


மதுரை பழங்காநத்தம் மற்றும் ஆண்டாள்புரம் உயரழுத்த மின்பாதையில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே, பழங்காநத்தம் பகுதியில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருவள்ளுவர் நகர் 1 முதல் 11 தெரு, ஆர்.சி.தெரு ஆகிய பகுதிகளிலும், ஆண்டாள்புரம் பகுதிக்குட்பட்ட அக்ரினி குடியிருப்பு வளாகம், ஏ.ஆர்.தோப்பு, பழைய மீனாட்சி மில் காலனி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராஜா உசேன் தெரிவித்தார்.

அதேபோல பராமரிப்பு பணியின் காரணமாக கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர் ஆகிய பகுதிகளிலும், இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என செயற்பொறியாளர் ஆதிலட்சுமி தெரிவித்தார்.


Next Story